மழையால் தேயிலை உற்பத்தி பாதிப்பு!

வெள்ளி, 24 அக்டோபர் 2008 (18:46 IST)
குன்னூர் : நீலகிரி மாவட்டத்திலகடந்த ஒருவார காலமாக பெய்து வரும் தொடர் மழையால் தேயிலை உற்பத்தி பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டதில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 1583 மி.மீ. மழை பெய்துள்ளது. இதனால் தேயிலை தோட்டத்தில் தேயிலையை பறிக்க முடியவில்லை.


தேயிலை தொழிற்சாலைகளுக்கு வரும் பசும் தேயிலைகளின் வரத்தும் வெகுவாக குறைந்துள்ளது. தொடரும் மழையுடன், மின்வெட்டும் இருந்து வருவதால் தேயிலை உற்பத்தி பெருமளவு குறைந்துள்ளது.

இங்கு தினசரி சராசரியாக தேயிலை தொழிற்சாலைக்கு 8 முதல் 10 ஆயிரம் கிலோ பசுந்தேயிலை வருவது வழக்கம்.

தற்போது மழை பெய்து வருவதால் 20 விழுக்காடு வைர பசுந்தேயிலை வரத்து குறைந்துள்ளதாக தேயிலை தொழிற்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

வெப்துனியாவைப் படிக்கவும்