பணவீக்கம் 11.07% ஆக குறைந்தது!
வியாழன், 23 அக்டோபர் 2008 (15:43 IST)
புது டெல்லி: பணவீக்கம் மூன்றாவது வாரமாக குறைந்துள்ளது. மொத்த விலை அட்டவணையை அடிப்படையாக பணவீக்கம் கணக்கிடப்படுகிறது.
அக்டோபர் 11 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் பணவீக்கம் 11.07 ஆக குறைந்துள்ளது
இதற்கு முந்தைய வாரத்தில் 11.44 விழுக்காடாக இருந்தது.
அதே நேரத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் இரண்டாவது வாரத்தில் பணவீக்கம் 3.07 விழுக்காடாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த வாரம் பழம், காய்கறிகள், உளுந்து, முட்டை ஆகியவற்றின் விலை 2%, சோளம், லவங்கம் பட்டை, நறுமணப் பொருட்கள் ஆகியவற்றின் விலை 1% குறைந்துள்ளது.
அதே நேரத்தில் தேயிலை 7%, மக்காச் சோளம் 4%, அரிசி, மைசூர் பருப்பு தலை 1% அதிகரித்துள்ளது.
பணப்பொருட்களில் ரப்பர் விலை 19%, சூரியகாந்தி விதை 5%, பருத்தி 4%, ஆமணக்கு விதை, நிலக்கடலை, கொப்பரை தேங்காய் தலை 1% அதிகரித்துள்ளது.
பதப்படுத்தாத புகையிலை 4%, எண்ணெய் கடுகு விலை தலா 1% அதிகரித்துள்ளது.
தவிட்டு எண்ணெய் விலை 10%, இறக்குமதி செய்யப்பட்ட சமையல் எண்ணெய் விலை 7%, பருத்தி எண்ணெய் விலை 5% குறைந்துள்ளது.
நெய் விலை 2% அதிகரித்துள்ளது.
பாலியெஸ்டர் நூல் விலை 3%, பருத்தி நூல் கோன் விலை 2% குறைந்துள்ளது.
சிட்டா பருத்தி நூல் விலை 1% அதிகரித்துள்ளது.
சைக்கிள் டியூப் விலை 16%, சைக்கிள் டயர் விலை 9% லாமினேட் சீட் விலை 4% அதிகரித்துள்ளது,.
பி.வி.சி பொருட்களின் விலை 10% குறைந்துள்ளது.
தாது பொருட்களில் பார்யட்டிஸ் விலை 11%, இரும்பு தாது விலை 2% குறைந்துள்ளது.
இரசாயன பொருட்களில் காஸ்டிக் சோடா விலை 4% அதிகரித்துள்ளது.
திரவ குளோரின் விலை 2%, எல்லா ரக ஆசிட்டுகளின் விலை 1% குறைந்துள்ளது.