மின்வெட்டு: நூற்பாலைகள் பாதிப்பு!

புதன், 22 அக்டோபர் 2008 (11:41 IST)
கோவை: மின்வெட்டை பற்றிய தமிழக அரசின் புதிய அறிவிப்பால் நூற்பாலைகள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று தென்னிந்திய சிறு நூற்பாலைகள் சங்கம் (சிஸ்பா) எச்சரித்துள்ளது.

தமிழகம் முழுவதும் சராசரியாக தினமும் 39 சதவீத மின்வெட்டு அமலில் உள்ளது. ஆனால், சென்னையில் ஒரு மணி நேரம் மட்டுமே மின்வெட்டு இருக்கிறது.

பன்னாட்டு நிறுவனங்களுக்கு தடையற்ற மின்சாரம் வழங்கும்போது உள்நாட்டு நிறுவனங்களுக்கு பாரபட்சம் காட்டப்படுகிறது.

இந்நிலையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள மின்விநியோக கட்டுப்பாட்டு முறை, தொழிற்சாலைகளுக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும்.

உயர்அழுத்த மின் இணைப்பு பெற்றுள்ள தொழிற்சாலைகளுக்கு ஏறத்தாழ 72 சதவீதம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும்.

தாழ்வழுத்த இணைப்பு பெற்ற தொழிற்சாலைகளுக்கு 52 சதவீத மின்வெட்டு அமல்படுத்தப்படும். இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து தொழில்களும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று சிஸ்பா தலைவர் ஜி.சüந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்