நெல் கொள்முதல் விலை அதிகரிப்பு!

புது டெல்லி: விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கு ஊக்கத் தொகையாக ( போனஸ்) குவின்டாலுக்கு ரூ.50 வழங்குவது என மத்திய அமைச்சரவையின் பொருளாதார விவகாரங்களுக்கான குழு முடிவு செய்தது.

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நேற்று அமைச்சரவையின் பொருளாதார விவகாரங்களுக்கான குழு கூட்டம் நடந்தது.

இதில் கரிப் பருவத்தில் கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கு ஊக்கத்தொகையாக குவின்டாலுக்கு ரூ, 50 வழங்குவதென முடிவு செய்யப்பட்டது.

மத்திய அரசு ஏற்கனவே சன்னரக நெல்லுக்கு கொள்முதல் விலை (குறைந்தபட்ச ஆதார விலை) குவின்டாலுக்கு ரூ.880ம், மற்ற ரக நெல்லுக்கு ரூ.850 என நிர்ணயித்து இருந்தது.

இனி மத்திய அரசு ஊக்கத்தொகையுடன் சன்னரக நெல்லுக்கு குவின்டாலுக்கு ரூ.980ம், மற்ற ரக நெல்லுக்கு ரூ.950 வழங்கும்.

இந்த புதிய விலை 2008-09 பருவத்திற்கு பொருந்தும்.

மத்திய அரசு வழங்கும் கொள்முதல் விலையுடன், தமிழக அரசு ஏற்கனவே ஜூன் மாதம் முதல் ஊக்கத்தொகையாக குவின்டாலுக்கு ரூ.150 வழங்கி வருகிறது.

இனி தமிழகத்தில் கொள்முதல் செய்யப்படும் சன்னரக நெல்லுக்கு குவின்டாலுக்கு ரூ. 1,100ம், மற்ற ரக நெல்லுக்கு ரூ. 1,050ம் கிடைக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்