உடுமலை: உடுமலை பகுதியில் மழை தொடர்ந்து பெய்து வருவதால் தென்னை நார் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
உடுமலை, தாராபுரம் மற்றும் பொள்ளாச்சி பகுதிகளில் நூற்றுக்கணக்கான தென்னை நார் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
இங்கு உற்பத்தியாகும் தரமான தென்னை நார்கள் கேரள மாநிலத்திற்கு அனுப்பப்படுகிறது. அங்கு பல்வேறு வகையான மிதியடிகள், உயர்ரக மெத்தைகள், படுக்கைகள் உட்பட பல பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.
வடகிழக்கு பருவமழை கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வருகிறது,.இதனால் நார் உற்பத்தி தொழில் நின்று போயுள்ளது.
ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட,அறிவிக்கப்படாத மின்வெட்டினால் நார் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்போதைய மழை நார் தொழிற்சாலைகளுக்கு கூடுதல் நெருக்கடியை உண்டாக்கியுள்ளது.