பரமத்தி வேலூர் : சேலம் மாவட்டத்தில் வெல்லம் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது
சேலம் மாவட்டத்தில் பரமத்தி வேலூர், அண்ணா நகர், வெங்கரை, பிலிக்கல்பாளையம், ஜேடர்பாளையம், சோழசிராமணி, கபிலர்மலை உட்பட, பல கிராமங்களில் கரும்பு பயிரிடப்படுகிறது. இங்கு பல ஆயிரம் ஏக்கரில் கரும்பு பயிர் செய்யப்பட்டுள்ளது. இந்த பகுதியில் உற்பத்தியாகும் கரும்பு, பரமத்தி வேலூர் பகுதியில் உள்ள வெல்லம் தயாரிக்கும் ஆலைகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
இதன் விற்பனை பிலிக்கல்பாளையம் சந்தை நடைபெறும்,. இங்கு தொடர்ந்து வெல்லம் விலை சரிந்து வருகிறது.
இங்கு தயார்க்கப்படும் வெல்லம் 30 கிலோ சிப்பங்களாக பிலிக்கல்பாளையம் வெல்ல ஏல சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. இங்கு நடைபெற்ற சென்ற வார ஏலத்தில் உருண்டை வெல்லம் (30 கிலோ) ரூ.600, அச்சு வெல்லம் ரூ.650 என்ற விலையில் ஏலம் போனது.
இது இந்த வாரத்தில் உருண்டை வெல்லம் ரூ.550, அச்சு வெல்லம் ரூ.570 ஆக குறைந்தது. கடநத மாதம் 1 டன் கரும்பு விலை ரூ.1,250 ஆக இருந்தது. வெல்லத்தின் விலை குறைந்துள்ளதால், கரும்பு விலையும் குறைந்து வருகிறது.