வங்கி வைப்புநிதி பாதுகாப்பு - மான்டேக் சிங் அலுவாலியா!

வெள்ளி, 10 அக்டோபர் 2008 (15:59 IST)
பொது மக்கள் இந்திய வங்கிகளிலும், இந்தியாவில் செயல்படும் அந்நிய நாட்டு வங்கி கிளைகளிலும் வைத்துள்ள பைப்பு நிதி, மற்ற ரொக்க இருப்புக்கள் பாதுகாப்பாக இருப்பதாக திட்டக் குழு துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா தெரிவித்தார்.

சி.என்.என்-ஐ.பி.என் தொலைகாட்சி ஒளிபரப்பும் டெலில் அட்வகேட் என்ற நிகழ்ச்சியில் கரன் தப்பாருக்கு, மான்டேக் சிங் அலுவாலியா பேட்டியளித்தார்.

அந்த பேட்டியின் போது, இந்தியவைச் சேர்ந்த வங்கிகளிலும், இந்தியாவில் செயல்படும் அந்நிய நாட்டு வங்கிகளின் கிளைகளிலும் வைப்பு நிதி உட்பட பொதுமக்கள் செலுத்தியுள்ள பணம் பாதுகாப்பாக இருக்கிறது. இந்த வங்கிகளிடம் தேவையான முதலீடு உள்ளது. எங்களின் மதிப்பீடு படி, மற்ற நாடுகளில் ஏற்பட்டது போல், இந்திய வங்கிகளில் நிதி நெருக்கடி ஏற்பட வாய்ப்பு இல்லை.

வெளிநாட்டு வங்கி கிளைகளில் பணம் போட்டுள்ள பொதுமக்களின் அச்சத்தை பற்றி (சில நாட்களுக்கு முன் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி நெருக்கடியில் சிக்கியிருப்பாதகா செய்தி பரவியது. இதனை தொடர்ந்து அந்த வங்கியில் பணம் போட்டவர்கள் நீண்ட வரிசையில் நின்று பணத்தை எடுத்ததாக செய்திகள் வந்தன) அலுவாலியா குறிப்பிடுகையில், எனது கருத்துப்படி அந்நிய நாட்டு வங்கிகள், மற்ற நாடுகளில் நெருக்கடியில் சிக்கியுள்ள வங்கிகளால் பாதிக்கப்படவில்லை.

இந்திய வங்கிகளுக்கு உள்ள விதிமுறைகளே, அந்நிய நாட்டு வங்கிகளுக்கும் பொருந்தும். இந்திய வங்கிகள், ரிசர்வ் வங்கியால் கண்காணிக்கப்படுகின்றன. இதனால் இந்த வங்கிகளில் வைத்துள்ள வைப்பு நிதி பற்றி அச்சம் கொள்ள தேவையில்லை.

அதே நேரத்தில் இந்த வங்கிகளின் பங்கு மதிப்பு, பங்குச் சந்தை நிலவரத்தை பொறுத்து மாறும் என்று குறிப்பிட்டார்.

உலகில் பல நாடுகளில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதை பற்றி குறிப்பிட்டு பேசும் போது, மத்திய நிதி அமைச்சகம், ரிசர்வ் வங்கி மேற்கொண்ட ஆய்வின்படி, மற்ற நாட்டு வங்கி, முதலீட்டு நிறுவனங்களில் ஏற்பட்டுள்ள நெருக்கடியில், இந்திய வங்கிகள் சிக்கவில்லை. அந்நிய நாடுகளில் திவாலான வங்கிகளில் கூட, இதன் பங்கு வைத்திருந்தவர்களே பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பணம் போட்டவர்கள் அல்ல என்று மான்டேக் சிங் அலுவாலியா கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்