மேட்டூர் நீர் மட்டம்!

செவ்வாய், 7 அக்டோபர் 2008 (12:21 IST)
திருச்சி:மேட்டூர் அணையின் நீர் மட்டம் இன்று காலை 73.96 அடியாக இருந்தது. கடந்த பதினைந்து தினங்களாக அணையின் தண்ணீர் வரத்து குறைந்திருந்தது நேற்று நீர் வரத்து சிறிது அதிகரித்துள்ளது.

விநாடிக்கு 10,552 கன அடி தண்ணீர் அணைக்கு வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து காவிரி பாசன பகுதிக்கு விநாடிக்கு 19,998 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

கல்லணையில் இருந்து காவிரி ஆற்றில் 3,041 கன அடி, வென்னாற்றில் 9,039 கன அடி, கல்லணை கால்வாயில் 3,514 கன அடி, கொள்ளிடம் ஆற்றில் 1,635 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்