புது டெல்லி: மேற்கு வங்கத்தில் இருந்து டாடா நிறுவனம் வெளியேறியது இந்திய “தொழில் துறைக்கு கருப்பு நாள்” என்று பாரதிய ஜனதா கட்சி கூறியுள்ளது.
அத்துடன் அந்த நிறுவனத்தை மாநிலத்திலேயே தக்க வைத்துக் கொள்ளாததற்கு மாநில அரசே காரணம் என்று குற்றம் சாற்றியுள்ளது.
மேற்கு வங்கத்தில் இருந்த டாடா மோட்டார் நிறுவனம் வெளியேறுவதாக வந்த செய்தியை அடுத்து பா.ஜ.க செய்தி தொடர்பாளர் பிரகாஷ் ஜவித்கர் கூறுகையில்,
நானோ கார் தொழிற்சாலைக்கு நிலத்தை கையகப்படுத்தும் போதிருந்தே, மாநில அரசு விவசாயிகளின் நலனை கருத்தில் கொள்ளவில்லை.
இரண்டாவதாக மாநில அரசு விவசாயிகளக்கு உரிய இழப்பீடு கொடுக்கவில்லை. மூன்றாவதாக மாநில நிர்வாகம் ஒரு முடிவை எட்டுவதற்கு தவறிவிட்டது.
டாடா போன்ற பிரபல நிறுவனம் அதன் நனோ கார் தொழிற்சாலை திட்டத்தை வேறு இடத்திற்கு மாற்றும் முடிவால், வளர்ச்சிக்கான வாய்ப்பை மாநில மக்கள் தவறிவிட்டு விட்டார்கள் என்று கூறினார்.