உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைந்ததன் காரணமாக ரூபாயின் பணவீக்கம் செப்டம்பர் 20ஆம் தேதியுடன் முடிவுற்ற வாரத்தில் 0.15 விழுக்காடு குறைந்துள்ளது.
செப்டம்பர் 13ஆம் தேதியுடன் முடிவுற்ற வாரத்தில் 12.14 விழுக்காடாக இருந்த பணவீக்கம் தற்பொழுது 11.99 விழுக்காடாக குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே வாரத்தில் 3.51 விழுக்காடாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
பணவீக்கத்தை கட்டுக்குள் வைத்திருக்க தற்பொழுது நடைமுறையில் இருந்துவரும் வட்டி விகிதத்தையே இந்திய மைய வங்கி (ஆர்.பி.ஐ.) தொடரும் என்று கூறப்படுகிறது.