புது டெல்லி:ரயில்வேயின் சரக்கு போக்குவரத்து கட்டணம் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் 5 முதல் ஏழு விழுக்காடுவரை உயர்த்தியுள்ளதாக சில பத்திரிக்கைகளில் வந்த செய்திகளை ரயில்வே மறுத்துள்ளது.
இது குறித்து புது டெல்லியில் ரயில்வே துறை செய்தி தொடர்பாளர் கூறுகையில், ரயில்வே எந்த சரக்கு கட்டணத்தையும் அதிகரிக்கவில்லை.
ரயில்வேயின் கொள்கை படி, அதிக போக்குவரத்து இல்லாத ஜூலை 1 ஆம் தேதி முதல் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை, சரக்கு கட்டணத்தில் 15 விழுக்காடு கட்டண சலுகை (கழிவு) வழங்குகிறது.
அதே போல் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் ஜூன் மாதம் முடிய போக்குவரத்து அதிகமுள்ள நெருக்கடி கால கட்டணமாக ஐந்து முதல் ஏழு விழுக்காடு வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கிறது என்று தெரிவித்தார்.