அமெரிக்காவே நெருக்கடிக்கு காரணம்- புதின்!

வெள்ளி, 3 அக்டோபர் 2008 (14:02 IST)
மாஸ்கோ: அமெரிக்க பொருளாதார நெருக்கடியும், அதை தொடர்ந்து மற்ற நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் பாதிப்புகளில் இருந்து தற்காத்துக் கொள்ள ரஷியா கடுமையான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

அதே நேரத்தில் இந்த நெருக்கடியை தீர்க்க அமெரிக்கா பொறுப்புணர்ச்சியுடன் செயல்படவில்லை என்று ரஷ்ய பிரதமர் விளாதிமீர் புதின் குற்றம் சாட்டியுள்ளார்.

ரஷ்ய அமைச்சரவை கூட்டம் புதன் கிழமை நடந்தது. இந்த கூட்டத்திற்கு பிறகு தொலைக்காட்சியில் புதின் பேசும் போது, நாங்கள் தகுந்த நடவடிக்கை எடுக்காததை உணர்கின்றோம். இது குறிப்பிட்ட நபரின் பொறுப்பு அல்ல. இந்த அமைப்பிற்கு தலைமை தாங்குவதாக கூறிக் கொள்பவர்களின் பொறுப்பு.

தற்போது ஏற்பட்டுள்ள எல்லா பொருளாதார நெருக்கடி, நிதி நெருக்கடியும் முதலில் அமெரிக்காவில் தான் தொடங்கியது என்று கூறினார்.

தற்போது ஏற்பட்டுள்ள நெடுக்கடி, ரஷ்யாவை பாதிக்காமல் இருக்க புதின் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளார். அந்த நாட்டு வங்கி அமைப்பில் 1.5 டிரில்லியன் ரூபிள் (25 ரூபிள்-1 அமெரிக்க டாலர்) புதிதாக அரசு வழங்கியுள்ளது. இத்துடன் பங்குச் சந்தையில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, பங்குகளை வாங்க 500 மில்லியன் ரூபிள் விடுவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்