தமிழகம் முழுவதும் உள்ள நியாயவிலை கடைகளில் நாளை முதல் மானிய விலையில் மளிகை பொருட்கள் விற்கப்படுகின்றன. பாக்கெட்டில் அடைத்து வழங்கப்படும் 10 மளிகை பொருட்களில் 2 பொருட்களின் எடை அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மல்லுத்தூள், சீரகம் ஆகிய 2 பொருட்களின் அளவை ஏற்கனவே அறிவித்ததை விட கூடுதலாக வழங்க அரசு முடிவு செய்துள்ளது. மல்லித்தூள் 75 கிராம் ரூ.12.75ம், சீரகம் 25 கிராம் ரூ.5ம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.
75 கிராம் மல்லித் தூள், 250 கிராமாக அதிகரித்து வழங்கப்படுகிறது. கூடுதலாக 175 கிராம் வழங்கப்படுவதால் அதன் விலை ரூ.18 ஆகும். இதே போல சீரகம் 25 கிராம் எடையில் இருந்து 50 கிராம் ஆக அதிகரித்து வினியோகம் செய்யப்படுகிறது. விலை ரூ.5.50, ரூ.50 மலிவு விலையில் 2 மளிகை பொருட்களின் எடை அதிகரித்து வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.