கொச்சி துறைமுகம்: வேலை நிறுத்தம் விலக்கல்!

வெள்ளி, 26 செப்டம்பர் 2008 (13:04 IST)
கொச்சி துறைமுகத்தில் சரக்கு பெட்டகத்தை கொண்டு செல்லும் டிரைலர் வாகன ஓட்டுநர்களின் நான்கு நாள் வேலை நிறுத்தம் நேற்று முடிவுக்கு வந்தது.

கொச்சி துறைமுகத்தில் இருந்து வெளியேயும், மற்ற இடங்களில் இருந்து சரக்கு பெட்டகங்கள் டிரைலர் லாரி மூலம் கொண்டுவரப்படுகின்றன. இதன் ஓட்டுநர், ஊழியரை மத்திய தொழில் பாதுகாப்பு படையைச் சேர்ந்தவர் தாக்கியதாக கூறி, டிரைலர் ஓட்டுநர்கள் திங்கட் கிழமை இரவு முதல் வேலை நிறுத்தம் செய்து வந்தனர்.

இதனால் சரக்கு பெட்டக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

கொச்சி துறைமுக பொறுப்பு கழகத்தின் தலைவர் என்.ராமச்சந்திரன் மற்றும் தொழிற்சங்க தலைவர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தது.

இந்த பேச்சுவார்த்தையின் முடிவால், லாரி டிரைலர் ஓட்டுநர்களின் வேலை நிறுத்தம் உடனடியாக விலக்கிக் கொள்ளப்பட்டதாக துறைமுக பொறுப்பு கழகத்தின் செய்தி தொடர்பாளர் நேற்று தெரிவித்தார்.

இதற்கு முன்னதாக தொழிலாளர் நல அதிகாரி முன்பு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எவ்வித முடிவும் எட்டப்படவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்