மின் விளக்கு உற்பத்தியில் முன்னிலையில் விளங்கும் சூர்யா ரோஷினி நிறுவனத்தின் குழல் விளக்குகள் 5 நட்சத்திர தரம் அளித்துள்ளது மத்திய வியபாரத் துறையின் எரிசக்தி திறன் வாரியம்!
டியூப் லைட்டுகள் (36 வாட்ஸ்) பிரிவில் 5 நட்சத்திரம் தரம் பெறும் முதல் நிறுவனம் சூர்யா என்பதும், மின் விளக்குகள் துறையில் இதுவே உயரிய தரச் சான்றிதழ் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது சூர்யா அறிமுகம் செய்துள்ள T-5 (மெல்லிய) எனப்படும் குழல் விளக்குகள், குமிழ் விளக்குகளுடன் ஒப்பிடுகையில் 85 விழுக்காடு மின் சக்தி சேமிப்பு திறன் கொண்டது.
மேலும், இந்த T-5 குழல் விளக்குகள் (டியூப் லைட்டுகள்) 10,000 மணி நேரம் வரை எரியக் கூடிய திறன் பெற்றது. இது, ஐ.எஸ்.ஐ. தரச் சான்றிதழ் பெற்ற சாதாரண டியூப் லைட்டுகளைக் காட்டிலும் இருமடங்கு என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து சூர்யா ரோஷினி நிறுவனத்தின் நிர்வாகியும், இயக்குனருமான ஜே.பி. அகர்வால் கூறுகையில், 4 நட்சத்திர தரத்திற்குப் பிறகு 5 நட்சத்திரம் தரச் சான்றிதழ் கிடைத்திருப்பது சூர்யா நிறுவனத்திற்கு பெருமை சேர்த்துள்ளது. மேலும், பயனீட்டாளர்களுக்கு சிறந்த தயாரிப்புகளை அளிப்பது என்ற எங்களது இலக்கிற்கு அத்தாட்சியாக உள்ளது என்று கூறியுள்ளார்.