குறு, சிறு, நடுத்தர, வேளாண் தொழில்களுக்கு ரூ.15 கோடி மானியம்: தமிழக அரசு அறிவிப்பு!

குறு, சிறு, நடுத்தர தொழில்களு‌க்கு‌ம், தொழிலில் பின் தங்கிய பகுதிகளுக்கும், வேளாண் சார்ந்த தொழில்கள் தொடங்குவதற்கும் ரூ.15 கோடி முதலீட்டு மானியம் வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கும், தொழிலில் பின் தங்கிய பகுதிகளுக்கும், தமிழகத்தில் உள்ள 385 ஒன்றியங்களிலும் வேளாண் சார்ந்த தொழில்கள் தொடங்குவதற்கும் முதலீட்டு மானியம் வழங்குவதற்காக ரூ.15 கோடியை அனுமதித்து 28-8-2008 அன்று ஆணை வழங்கி உள்ளது.

இதில், கோவை மாவட்டத்திற்கு ரூ.1.7 கோடியும், காஞ்சீபுரம் மாவட்டத்திற்கு ரூ.1.25 கோடியும், திருவள்ளூர் மாவட்டத்திற்கு ரூ.1.2 கோடியும், ஈரோடு மாவட்டத்திற்கு ரூ.1 கோடியும், வேலூர் மாவட்டத்திற்கு ரூ.95 லட்சமும், சேலம், மதுரை, நாமக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு தலா ரூ.70 லட்சமும் உள்பட மொத்தம் ரூ.15 கோடிக்கான அனுமதியும் வழங்கப்பட்டு உள்ளது.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் தொடங்க 1-8-2006-க்கு பின் ஆரம்ப கட்ட நடவடிக்கை எடுத்து, 22-2-2008 அன்று தொழில் கொள்கை அறிவிக்கப்பட்ட பின்பு வணிக ரீதியாக உற்பத்தியை தொடங்கிய தொழில்களுக்கும், இதன் பின்னர் தொடங்கப்பட்ட தொழில்களுக்கும் மானியம் வழங்க இந்த தொகை பயன்படுத்தப்படும்.

அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர்கள் தகுதி உள்ள தொழில்முனைவோர்களை கண்டறிந்து, மானியம் வழங்உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், இந்த நல்ல வாய்ப்பினை பயன்படுத்தி தமிழகத்தில் தொழில் முன்னேற்றத்திற்கு உதவிடுமாறு தொழில் முனைவோர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" எ‌ன்றகூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்