நிறுவனங்கள் இணைதல் & வாங்குதல்- கருத்தரங்கு!

சனி, 6 செப்டம்பர் 2008 (18:19 IST)
மும்பையில் நேற்று இன்று நிறுவனங்கள் இணைதல் & வாங்குதல்: ஒருங்கினைப்பு முறை என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது.

இதில் வரவேற்புரையாற்றிய டன் அண்ட் ப்ராட்ஸ்டிரிட் நிறுவனத்தின் இந்திய கிளை தலைவர் டாக்டர் மனோஜ் வைஸ், கடந்த ஐந்து வருடங்களில் இந்திய நிறுவனங்களின் வளர்ச்சிக்கு இணைதல் மற்றும் வாங்குதல் முறை முக்கிய காரணியாக இருந்துள்ளது. இவை இந்தியாவில் உள்ள மற்ற நிறுவனங்களை மட்டும் இணைத்துக் கொள்ளவில்லை. அயல்நாட்டு நிறுவனங்களையும் வாங்கியுள்ளன. 2007 நிதி ஆண்டில் இந்திய நிறுவனங்கள் மற்ற நிறுவனங்களின் வாங்கியதன் மதிப்பு ரூ.33.1 பில்லியன் டாலாரக இருந்தது. இது அடுத்த நிதி ஆண்டில் 19.8 பில்லியன் டாலராக குறைந்தது என்று தெரிவித்தார்.

இந்த கருத்தரங்கில் செபியின் முழு நேர உறுப்பினர் டாக்டர் டி.சி நாயர் பேசுகையில், செபியின் பணி ஒருங்கினைதலை முறைப்படுத்தலும், இந்த நிறுவனங்களில் சம்பந்தப்பட்ட எல்லா பிரிவினரின் நலன்களையும் பாதுகாப்பதாகும் என்று கூறினார்.

ரிலிக்ரி கேப்பிடல் மார்க்கெட்டின் தலைவர் கிரன் வைத்யா பேசுகையில், உலக அளவில் வர்த்தக முறையில், மற்ற நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களை வாங்குவது அடிப்படை தன்மையாக மாறி வருகிறது. இந்த ஆண்டு மே மாதம் வரையிலும் இணைதல் மற்றும் வாங்குதலில் 15,698 ஒப்பந்தங்கள் ஏற்பட்டுள்ளன. இதன் மதிப்பு 1421.3 பில்லியன் டாலர் என்று தெரிவித்தார்.

வோக்ஹார்ட் நிறுவனத்தின் செயல் இயக்குநர் டாக்டர் முர்தஜா கோராகிவாலா பேசுகையில், கடந்த 15 வருடங்களுக்கு முன்பு, எங்கள் நிறுவனத்தின் மொத்த வர்த்தகத்தில் இணைதல் மற்றும் வாங்குதல் வாயிலாக கிடைக்கும் வருவாய் 10 விழுக்காடாக இருந்தது. இந்தியாவில் மருந்து உற்பத்தி நிறுவனங்களின் தன்மை கடந்த 3 வருடங்களில் மாறியுள்ளது. இதனால் அதிக அளவு அந்நிய நாட்டு நிறுவனங்கள் வாங்கப்படுகின்றன. அவைகளுடன் இனணக்கப்படுகின்றன. இதனால் எங்களின் வருவாய் 75 விழுக்காடு அதிகரித்துள்ளது என்று கூறினார்.

இந்த கருத்தரங்கில் மகேந்திரா அண்ட் மகேந்திரா நிறுவனத்தைச் சேர்ந்த வி.எஸ்.பார்த்தசாரதி, பிங்க்ட்ரான் கன்சல்டிங் அண்ட் இன்வெஸ்டிகேஷன் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் கிருஷ்கின்ட பிஸ்வாஸ், விஷால் காந்தி ஆகியோரும் உரையாற்றினார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்