மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் நேற்று அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.603.28 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன.
மற்ற நாடுகளின் பங்குச் சந்தைகளில் சரிவு ஏற்பட்டதால், இங்கும் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் பங்குகளை விற்பனை செய்தன. இவை நேற்று ரூ.3,207.47 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன. ரூ.2,604.19 கோடி முதலீடு செய்துள்ளன. நேற்று மட்டும் ரூ.603.28 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.
உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ. 431.11 கோடி முதலீடு செய்தன.
சிறு முதலீட்டாளர்களுக்காக புரோக்கர்கள் ரூ.85.24 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கினார்கள். அயல்நாட்டு வாழ் இந்தியர்கள் ரூ.72 லட்சம் முதலீடு செய்தனர். புரோபரிட்டிஸ் ரூ.25.19 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தனர்.