இந்தியா-அரபு நாடுகள் தாராள வர்த்தக ஒப்பந்தம்!

புதன், 27 ஆகஸ்ட் 2008 (20:51 IST)
இந்தியா-அரபு நாடுகளுக்கு இடையே தாராள வர்த்தக ஒப்பந்தம் பற்றிய பேச்சுவார்த்தை விரைவில் துவங்கப்பட உள்ளது.

இந்தியாவுக்கும் கலஃப் கோவாப்ரேஷன் கவுன்சிலிக்கும் இடையே [Gulf Cooperation Council (GCC)] தாராள வர்த்தக ஒப்பந்தம் பற்றிய பேச்சு வார்த்தை நடந்துவருகிறது. இதன் முதல் சுற்று பேச்சுவார்த்தை 2006 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் நடந்தது.

இதற்கு பிறகு அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவில்லை.

இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் கல்ப் போவாப்ரேஷனைச் சேர்ந்த அதிகாரிகள், கொரியா, ஐரோப்பிய கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இந்தியாவுடன் நடத்தும் பேச்சுவார்த்தை நின்று போயுள்ளது.

இந்த பேச்சுவார்த்தை தொடர்வது குறித்து அபுதாபி வந்துள்ள மத்திய வர்த்த அமைச்சகத்தின் இணை செயலாளர் பாரதி சிகாக் கூறுகையில், இந்த பேச்சுவார்த்தை அடுத்த இரண்டு மாதங்களில் துவங்கும். இதற்கான தேதி முடிவாகிவிட்டது. அடுத்த மாதத்தில் அல்லது அக்டோபரில் பேச்சு வார்த்தை துவங்கும்.

சவுதி அரேபியாவில் அடுத்த வருடம் கல்ப் கோவாப்ரேஷன் கவுன்சில் நாடுகளுக்கும்-இந்தியாவுக்கும் இடையே தொழில்துறை ஒத்துழைப்பு மாநாடு நடக்கவுள்ளது. இந்த மாநாட்டிற்கு முன்பு தாராள வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவுடன் அதிக அளவு வர்த்தகம் செய்யும் நாடுகளில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. கல்ப் கோவாப்ரேஷன் கவுன்சில் நாடுகள் இரண்டாவது இடத்தில் உள்ளன. இந்தியாவுக்கும், இந்த நாடுகளுக்கும் இடையே கடந்த ஆறு ஆண்டுகளில் வர்த்தகம் 6 மடங்கு அதிகரித்துள்ளது. 2001 ஆம் ஆண்டு 5.55 பில்லியன் டாலராக இருந்த வர்த்தகம், சென்ற வருடம் 35 பில்லியனாக (1 பில்லியன்-100 டாலர்)அதிகரித்துள்ளது.

அரபு நாடுகளில் இருந்து இந்தியா அதிக அளவு பெட்ரோலிய கச்சா எண்ணெய் இறக்குமதி செய்கிறது. அந்த நாடுகளுக்கு உணவு பொருட்கள், மற்றும் உற்பத்தி துறை சார்ந்த பொருட்களை ஏற்றுமதி செய்கிறது.

கல்ப் கோவாப்ரேஷன் கவுன்சிலில் ப‌க்ரைன், க‌த்தா‌ர், குவைத், ஓமன், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு குடியரசு ஆகிய ஆறு நாடுகள் இடம் பெற்றுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்