பணவீக்கம் 6 விழுக்காடாக குறையும்!

வெள்ளி, 8 ஆகஸ்ட் 2008 (12:01 IST)
பணவீக்கம் அடுத்த ஆண்டில் 5 முதல் 6 விழுக்காடாக குறையும் என்று நிதி அமைச்சகத்தின் பொருளாதார ஆலோசகர் அர்விந்த் வீர்மணி தெரிவித்தார்.

கர்நாட மாநில சி.ஐ.ஐ அமைப்பு “இந்திய பொருளாதாரத்தின் நில” என்ற தலைப்பில் கருத்தரங்கை நேற்று நடத்தியது. இதில் கலந்து கொண்ட அர்விந்த் வீர்மணி செய்தியாளர்களிடம் பேசும் போது, அடுத்த வருடத்தில், அநேகமாக ஆகஸ்ட் மாத வாக்கில் பணவீக்கம் 5 முதல் 6 விழுக்காடாக குறையும் என்று கூறினார்.

இவர் மத்திய நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரத்துறையில் பொருளாதார ஆலோசகராக உள்ளார்.

சி.ஐ.ஐ கருத்தரங்கில் பேசும் போது, இந்தியா 11 வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் (2007 ஏப்ரல் முதல் 2012 மார்ச்) இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 9 விழுக்காடாக ( உள்நாட்டு மொத்த உற்பத்தி) இருக்கும்.

எனக்கு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அடுத்த ஐந்து ஆண்டுகளில் அதிக அளவில் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இது சராசரியாக 9 விழுக்காடாக இருக்கும். இந்தியாவின் முதலீடு வளர்ச்சி 18 விழுக்காடாக இருக்கிறது. இந்த முதலீடு குறைந்தாலும், பொருளாதார வளர்ச்சி ஒன்பது விழுக்காடாக இருக்கும் என்று கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்