நியாய விலை கடைகளில் சோயா எண்ணெய்!

புதன், 6 ஆகஸ்ட் 2008 (18:53 IST)
வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு நியாய விலை கடைகள் மூலம் சோயா எண்ணெய் வழங்க ஹரியானா மாநில அரசு முடிவு செய்துள்ளது.

இது குறித்து ஹரியானா மாநில நுகர்வோர் பொருள் வழங்கல் துறை அதிகாரி கூறுகையில், வெளிச் சந்தையில் சோயா எண்ணெய் லிட்டர் ரூ.72 முதல் ரூ.78 வரை விற்பனையாகிறது. இதை குடும்ப அட்டைதாரர்களுக்கு மானிய விலையில் லிட்டர் ரூ,66 க்கு விற்பனை செய்யப்படும்.

மத்திய அரசு சோயா எண்ணெயை இறக்குமதி செய்து ஹரியானா மாநிலத்திற்கு வழங்கும் பொறுப்பை, நஃபீட் நிறுவனத்திடம் கொடுத்துள்ளது.

இது இறக்குமதி செய்யும் விலையில் இருந்து லிட்டருக்கு ரூ.15 வரை மானிய விலையில் விற்பனை செய்யப்படும். இந்த மானியத்தை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளும்.

மத்திய அரசு ஹரியானா மாநிலத்தில் நியாய விலை கடைகள் மூலம் விற்பனை செய்ய 100 டன் சோயா எண்ணெய் ஒதுக்கியுள்ளது என்று தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்