அந்நியச் செலாவணிச் சந்தையில் இன்றைய காலை வர்த்தகத்தில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 6 பைசா குறைந்தது.
வளைகுடா நாடுகள் உற்பத்தி செய்யும் கச்சா எண்ணெய் விலை குறைவும், இந்திய பங்குச் சந்தைகளில் ஏற்பட்டுவரும் வீழ்ச்சியின் காரணமாகவும் டாலரின் மதிப்பு உயர்ந்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு நேற்று ரூ.42.15 / 16 ஆக இருந்தது. இன்று காலை ரூ.42.21 / 22 ஆக குறைந்துள்ளது.