இயற்கை ரப்பர் உற்பத்தி உயர்வு!

வியாழன், 3 ஜூலை 2008 (12:36 IST)
இயற்கை ரப்பர் உற்பத்தி 24 விழுக்காடு அதிகரித்துள்ளது. இந்த நிதி ஆண்டில் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் மூன்று மாதங்களில் 1,78,250 டன் ரப்பர் உற்பத்தியாகி உள்ளது.

சென்ற வருடம் இதே மூன்று மாதத்தில் 1,43,630 டன் ரப்பர் உற்பத்தியானது.

இதனுடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் 24.1 விழுக்காடு ரப்பர் உற்பத்தி அதிகரித்துள்ளது என்று ரப்பர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். ரப்பர் பால் எடுப்பதற்கு சாதகமான பருவநிலை, நல்ல விலை கிடைத்ததால் உற்பத்தி அதிகரித்து.

உள்நாட்டில் ரப்பர் உற்பத்தி அதிகரித்துள்ளதால், அயல்நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் ரப்பர் அளவு 22.2 விழுக்காடு குறைந்துள்ளது. அதே நேரத்தில் ஏற்றுமதி 42.9 விழுக்காடு அதிகரித்துள்ளது. இந்த மூன்று மாதங்களில் 14,875 டன் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்