பங்குச் சந்தை உயருமா?

திங்கள், 19 மே 2008 (20:15 IST)
பங்குச் சந்தைகளில் இன்று (செவ்வாய்) வர்த்தகம் தொடங்கும் போது குறியீட்டு எண்க‌ளி‌‌ல் அதிக வேறுபாடு இருக்காது. காலையில் வர்த்தகம் தொடங்கும் போது நிஃப்டி 5150-5160 அளவில் இருக்கும். இது 5140 க்கும் குறையாமல் இருந்தால், பங்குகளின் விலை அதிகரித்து நிஃப்டி 5175-5190 வரை உயர வாய்ப்புள்ளது. இந்த நிலையில் அதிக அளவு பங்குகளை வாங்குவதை பார்க்கலாம். இதனால் நிஃப்டி 5215-5250 வரை உயர வாய்ப்பு உள்ளது.

இதற்கு எதிராக நிஃப்டி 5110-5075 என்ற அளவிற்கு குறைந்து, 5075 என்ற அளவுக்கும் மேல் குறைந்தால், அதிகளவு இலப கணக்கு பார்க்க துவங்குவார்கள். அப்போது பங்குளின் விலை சரிந்து நிஃப்டி 5040-5015 என்ற அளவுக்கு குறையலாம்.

வெள்ளிக் கிழமை கண்ணோட்டம்!

வெள்ளிக் கிழமை பங்குச் சந்தையில் அதிக ஏற்ற இறக்கத்துடன் இருந்தாலும், இறுதியில் குறியீட்டு எண்கள் அதிகரித்தன. பணவீக்கம் பற்றிய தகவல் வெளியிடப்படும் போது, இதன் தாக்கம் பங்குச் சந்தையில் அதிகளவு இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. பணவீக்கம் 7.59% இருக்கும என்ற பங்குச் சந்தை வட்டாரங்கள் எதிர்பார்த்தன. ஆனால் முந்தைய வாரத்தின் அளவான 7.61% என்ற அளவில் இருந்து 7.83 % ஆக அதிகரித்தது.

வங்கி, உலோக உற்பத்தி நிறுவனங்களின் பங்குகளை வாங்குவதில் அதிக ஆர்வம் காண்பித்தனர். இதன் பங்கு விலைகள் அதிகரித்தன. இந்திய பங்குச் சந்தையில் வர்த்தகம் ஆரம்பித்த பிறகு, தொடங்கும் ஐரோப்பிய பங்குச் சந்தையில் சாதகமான நிலை இருந்தது.

இந்திய பங்குச் சந்தை தொடங்குவதற்கு முன்பு வர்த்தகம் தொடங்கும் ஆசிய நாட்டு பங்குச் சந்தைகள் சிலவற்றில் குறியீட்டு எண்கள் அதிகரித்தும், சிலவற்றில் குறைந்தும் காணப்பட்டன. இறுதியில் சென்செக்ஸ் 17,400 புள்ளிகளுக்கும் அதிகமாகவும், நிஃப்டி 5,150 க்கும் அதிகமாக முடிந்தது. இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு ரூ.42.89 ஆக உயர்ந்தது.

பங்குச் சந்தைகளில் மொத்தம் ரூ.57,401 கோடிக்கு வர்த்தகம் நடந்தது. அஷ்வர்யா டெலி, ஹெச்.டி.ஐ.எல், செயில், ரிலையன்ஸ், கேரின் இந்தியா ஆகிய நிறுவனங்களின் பங்குகளில் அதிக அளவு வர்த்தகம் நடந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்