நேற்று பங்குச் சந்தைகளில் அதிகரித்த குறியீட்டு எண்கள், இறுதியில் குறைந்து விட்டன. நிஃப்டி 5300 க்கும் குறைந்தது.
இதே போல் சென்செக்ஸ் 18,100 க்கும் குறைந்து விட்டது. இந்திய பங்குச் சந்தையில் வர்த்தகம் ஆரம்பித்தவுடன், தொடங்கிய ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் குறியீட்டு எண்கள் குறைந்தன. இதன் காரணமாக இந்திய பங்குச் சந்தைகளில் மதியத்திற்கு பிறகு குறியீட்டு எண்கள் குறைந்தது. மதியத்திற்கு பிறகு பங்குகளின் விலையில் அதிக அளவு ஏற்ற இறக்கம் காணப்பட்டது.
பல பங்குகளின் விலை அதிகரித்தது. குறிப்பாக பெட்ரோலிய , உலோக உற்பத்தி நிறுவனங்களின் பங்கு விலை அதிக அளவு உயர்ந்தது. சென்செக்ஸ் 27 புள்ளிகள் உயர்ந்து 18075 ஆகவும், நிஃப்டி 3 புள்ளிகள் உயர்ந்து 5280 ஆகவும் முடிந்தது.
நேற்று நாககிஜூனா பெர்டிலைசர்ஸ், சம்பல் பெர்டிலைசர் பங்குகளை அதிகமாக வாங்குவதை காண முடிந்தது. காமன் இந்தியா, டாடா பவர், பி.எப்.சி, நெய்வேலி லிக்னைட், ஏ.சி.சி, லாங்கோ இன்ப்ரா, செயில், ரிலையன்ஸ் கேப்பிடல், ஆர்.என்.ஆர்.எல் ஆகிய பங்குகள் வாங்குவதிலும் ஆர்வம் காண்பித்தனர். நேற்று மொத்தம் ரூ.55,269.78 கோடிக்கு வர்த்தகம் நடந்தது.
இன்று
நிஃப்டி குறியீட்டு எண்ணை ஆய்வு செய்தால், இடைப்பட்ட நேரத்தில் குறைந்தாலும் தினசரி 5240 க்கும் மேல் முடிகின்றது. நேற்று அமெரிக்க வீட்டு வசதி புள்ளி விபரங்கள் வெளியாயின. இதன் தாக்கம் மற்ற நாட்டு பங்குச் சந்தைகளிலும் இருந்தது. மற்ற நாட்டு நிலவரங்களை கணக்கில் எடுத்துக் கொண்டே, இன்று நமது பங்குச் சந்தை தொடங்கும். அமெரிக்க பங்குச் சந்தையின் குறியீட்டு எண்கள் குறையாமல் இருந்தால், இன்று காலை, நேற்று இறுதியாக இருந்ததது போலவே குறியீட்டு எண்கள் தொடங்கும். ஒரு வேளை 5300 க்கும் அதிகரித்தால் பிறகு நிஃப்டி உயர்வதற்கு வாய்ப்பு உள்ளது.
நிஃப்டி 5315/5355/5400 என்ற அளவில் இருக்கும். 5400 க்கும் மேல் அதிகரித்தால், அதிக அளவு பங்குகளை வாங்குவதில் ஆர்வம் செலுத்துவார்கள். இதனால் நிஃப்டி குறைந்த நேரத்திற்கு 5440/5500 என்று உயர வாய்ப்பு உள்ளது.
ஒரு வேளை நிஃப்டி 5240/5200/5170 என்ற அளவில் குறைந்து 5170 க்கும் குறைந்தால், பங்குகளை அதிக அளவு விற்பனை செய்வார்கள். இதனால் குறைந்த நேரத்திற்கு 5120/5080 என்ற அளவு குறையும்.
இன்று ஆர்.என்.ஆர்.எல், ஜீந்தால் சா, வெல்குஜ், பஜாஜ் ஹிந்த், விஜயா வங்கி, டாடா டீ, பஜாஜ் ஆட்டோ, ரிலையன்ஸ் கேப்பிடல் ஆகிய பங்குகள் அதிக அளவு விற்பனையாகும்.