பங்குச் சந்தையில் பங்குகளின் விலை அதிக அளவு ஏற்ற இறக்கமாக இருப்பதால், வொக்கார்ட் மருத்துவமனை பங்கு விலைகளை மாற்றியுள்ளது.
பங்குகளை வெளியிடும் இந்நிறுவனம் முதலில் ரூ.10 முகமதிப்புள்ள பங்கு விலை ரூ.280 முதல் ரூ.310 என அறிவித்து இருந்தது.
பங்குச் சந்தையில் நிலையில்லாத நிலை இருப்பதால் இப்போது இதன் விலையை ரூ.225 முதல் ரூ.260 என குறைத்துள்ளது.
இது 2,45,87,097 பங்குகளை வெளியிடுகிறது. இதில் ஊழியர்களுக்கு 5 லட்சம் பங்குகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இந்நிறுவனத்தின் மொத்த மூலதனத்தில், இப்போது பங்கு வெளியீடு மூலம் திரட்டப்படும் தொகை 24.06 விழுக்காடாகும்.
இந்த பங்கு வெளியீட்டிற்கு பங்குச் சந்தை ஆய்வு நிறுவனமான பிட்ச் ரேட்டிங் இந்தியா நிறுவனம் 5க்கு 4 என்ற மதிப்பீடு வழங்கியுள்ளது. இந்த மதிப்பீடு வொக்கார்ட் மருத்துவமணை சராசரியை விட மேலானது என்பதை குறிப்பதாகும்.
இதன் பங்குகள் மும்பை பங்குச் சந்தை, தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட உள்ளன.