பொதுத்துறை நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பி.எஸ்.என்.எல்.),சாதாரண தொலைபேசி வைத்திருப்பவர்களுக்கு இலவச காப்பீடு செய்து தர போகிறது.
இந்த திட்டம் பற்றி இதன் சேர்மனும் செயல் இயக்குநருமான கோயல் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
எங்கள் தொலைபேசி வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு ரூ.50 ஆயிரத்திற்கு இலவச காப்பீடு வசதி செய்து தர போகின்றோம். அவர்கள் நிரந்த்ரமாக உடல் ஊனமுற்றாலோ அல்லது விபத்தால் மரமடைந்தாலோ, இந்த காப்பீட்டில் இருந்து, நஷ்டஈடாக ரூ.50 ஆயிரம் வழங்கப்படும்.
இதற்கான பிரிமியத்தை பஜாஜ் லைப் இன்ஷ்யூரன்ஸ் நிறுவனத்திற்கு, பி.எஸ்.என்.எல். செலுத்தும். தற்சமயம் இந்த காப்பீடு வசதி சாதாரண தொலை பேசி வைத்திருக்கும் சந்தாதாரர்களுக்கு மட்டும் செய்யப்பட்டுள்ளது. இது எதிர்காலத்தில் செல் போன் சந்தாதாரர்களுக்கும் விரிவு படுத்தப்படும்.
தற்போது பி.எஸ்.என்.எல். தொலைபேசி வைத்திருப்பவர்கள், அதை திரும்ப ஒப்படைத்து வருகின்றனர். இந்த இலவச விபத்து காப்பீடு சலுகையால், சந்தாதாரர்கள் தொலைபேசியை திரும்ப ஒப்படைப்ப்து தடுக்கப்படும். அத்துடன் புதிதாக பலர் தொலைபேசி வாங்குவதற்கும் ஊக்கப்படுத்துவதாக இருக்கும் என்று கோயல் கூறினார்.