மகாராஷ்டிரா மாநிலம் நன்டிட் நகருக்கு அருகே மருந்து உற்பத்தி செய்ய சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்கப்பட உள்ளது. இதை பர்ஸ்வநாத் டெவலப்பர்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தின் துணை நிறுவனமான பர்ஸ்வநாத் எஸ்.இ.இஜட். லிமிடெட் அமைக்கிறது.
இந்த நிறுவனம் நன்டிட் அருகே குர்ஸ்னூர் பகுதியில் மருந்து உற்பத்தி சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப்பதற்கான அனுமதியை மகாராஷ்டிர மாநில தொழில் மேம்பாட்டுக் கழகத்திடம் இணைந்து அமைக்கிறது.
இது 370 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படும். இதற்கான நிதி, சிறப்பு நிதி திரட்டல் மூலம் திரட்டப்படும். இந்த கூட்டு நிறுவனத்தில் பர்ஸ்வநாத் நிறுவனம் 74 விழுக்காடு பங்கையும், மகாராஷ்டிரா தொழில் மேம்பாட்டு கழகம் 20 விழுக்காடு பங்கை கொண்டிருக்கும்.
இந்த நிறுவனத்தின் சேர்மன் பிரதிப் ஜெயின் செய்தியாளர்களிடம் கூறுகையில், இது மகாராஷ்டிரா மாநிலத்தில் நாங்கள் அமைக்கப்போகும் இரண்டாவது சிறப்பு பொருளாதார மண்டலமாகும். இதற்கான நிலம் ஏற்கனவே கையப்படுத்தப்பட்டு விட்டது. இதனால் இந்த பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பு உருவாகும். மருந்து ஏற்றுமதி நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் மற்ற நாடுகளுடன் போட்டியிடும் வாய்ப்பு கிடைக்கும் என்று கூறினார்.
இந்நிறுனம் இந்தூர், குர்கான், டேராடூன் ஆகிய இடங்களிலும் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப்பதற்கான அனுமதியை பெற்றுள்ளது.