நெல் கொள்முதல் கணக்கு கா‌‌ண்‌பி‌க்க ‌வியாபா‌ரிகளு‌க்கு உ‌த்தரவு!

Webdunia

வியாழன், 6 டிசம்பர் 2007 (10:26 IST)
மத்திய அரசு தனிநபர்கள், வியாபாரிகள், வர்த்தக நிறுவனங்கள் கொள்முதல் செய்யும் பாசுமதி உட்பட எல்லா வகை நெல் பற்றிய தகவலை வாரம் ஒரு முறை அரசிடம் தெரிவிக்க வேண்டும் என்று மத்திய உணவு அமைச்சகம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

இது தொட‌ர்பாக ம‌த்‌திய உணவு அமை‌ச்சக‌ம் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், தனிநபர்கள், நிறுவனங்கள் வாரத்திற்கு 10 ஆயிரம் டன்னிற்கு மேல் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்தால், அதன் விபரத்தை மாநில அரசுக்கு வாரம் ஒரு முறை தெரிவிக்க வேண்டும். இவர்கள் 25,000 டன்னிற்கு மேல் கொள்முதல் செய்தால் அதன் விபரத்தை மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டும்.

இரண்டுக்கும் மேற்பட்ட மாநிலக்களில் இருந்து கொள்முதல் செய்யப்படும் போது, மொத்த கொள்முதல் அளவு 10 ஆயிரம் டன்னிற்கு மேல் அதிகமானால், அதிக பட்சமாக எந்த மாநிலத்தில் கொள்முதல் செய்யப்பட்டதோ, அந்த மாநில அரசிடம் விபரத்தை அறிவிக்க வேண்டும். வாரம் ஒரு முறை கட்டாயமாக இருப்பு அறிவிக்கும் நடைமுறை இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை அமலில் இருக்கும். அதற்கு பிறகு 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் வரை ஒவ்வொரு மாதமும் இருப்பு பற்றிய தகவலை தெரிவிக்க வேண்டும் என்று அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதே மாதிரி தனிநபர்கள், நிறுவனங்கள் கொள்முதல் செய்யும் கோதுமை பற்றிய விபரத்தையும் அரசிடம் அறிவிக்க வேண்டும் என்று முன்பு இதே மாதிரியான அறிவிக்கையை மத்திய உணவு அமைச்சகம் வெளியிட்டது.

அத்துடன் மாநில அரசுகளிடம் தனி நபர்கள், நிறுவனங்கள் தாக்கல் செய்யும் விபரத்தை மாநில அரசுகள் மத்திய உணவு அமைச்சகத்துக்கு மாதம் ஒரு முறை தெரிவிக்க வேண்டும் மத்திய அரசு கூறியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்