பாரத் செல் லிமிடெட் பங்குளை விற்க அனுமதி

சனி, 1 டிசம்பர் 2007 (15:14 IST)
பாரத் செல் லிமிடெட் நிறுவனத்தில் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசனுக்கு சொந்தமாக உள்ள பங்குகளை விற்பனை செய்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசனும், ஹாலந்து நாட்டைச் சேர்ந்த செல் பெட்ரோலிய நிறுவனமும் இணைந்து ரூ.200 கோடி முதலீட்டில் 1993 ஆம் ஆண்டு பாரத் செல் லிமிடெட் என்ற நிறுவனத்தை துவக்கின.

இது வாகனங்கள், இயந்திரங்களுக்கு தேவையான மசகு எண்ணெய், கிரிஸ் விற்பனை செய்கின்றது. அத்துடன் சமையல் எரிவாயுவையும் விற்பனை செய்கிறது.

இந்த கூட்டு நிறுவனத்தில் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசனுக்கு 49 விழுக்காடு பங்கு உள்ளது.

இ‌ந்த பங்கை ரூ.152.40 கோடிக்கு விற்பனை செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த பங்குகளை ஹாலந்தைச் சேர்ந்த செல் நிறுவனம் அல்லது அதன் துணை நிறுவனத்திடம் விற்பனை செய்யப்படும்.

வெப்துனியாவைப் படிக்கவும்