பணவீக்கம் அதிகரிப்பு!

Webdunia

சனி, 17 நவம்பர் 2007 (18:20 IST)
உற்பத்தி துறை சார்ந்த பொருட்களின் விலை அதிகரித்த காரணத்தினால் நவம்பர் 3ஆ‌ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் பணவீக்கம் 3.11 விழுக்காடாக அதிகரித்தது. (சென்ற வருடம் இதே கால கட்டத்தில் பணவீக்கம் 5.45 விழுக்காடாக இருந்தது. )

கடந்த ஐந்து ஆண்டுகளில் முதல் முறையாக அதற்கு முந்தைய வாரத்தில் பணவீக்கம் 2.97 விழுக்காடாக குறைந்தது.

மொத்த விலை குறியீட்டு எண் 215.6 புள்ளிகளாக அதிகரித்தது. இது அதற்கு முந்தைய வாரத்தில் 215.1 புள்ளிகளாக இருந்தது.

பழம் காய்கறி போன்ற உணவுப் பொருட்களின் குறியீட்டு எண் 0.1 விழுக்காடு குறைந்தது. இதன் குறியீட்டு எண் 224.2 புள்ளிகளாக உள்ளது. (முந்தைய வாரம் 224.5 )

சோளத்தின் விலை 3 விழுக்காடு, கோழி இறைச்சி, பழம், காய்கறிகள், மக்கா சோளம் ஆகியவற்றின் விலை 2 விழுக்காடு, துவரம் பருப்பு விலை 1 விழுக்காடு குறைந்தது.

அதே நேரத்தில் பயத்தம் பருப்பு விலை 3 விழுக்காடு, மீன், முட்டை விலை 2 விழுக்காடு, கம்பு, பன்றி இறைச்சி விலை 1 விழுக்காடு அதிகரித்தது.

அட்டவணையில் உள்ள உணவு பொருட்கள் அல்லாத விலை குறியீட்டு எண் 0.4 விழுக்காடு அதிகரித்து 209.6 புள்ளிகளாக உயர்ந்தது. ரப்பர் விலை 3 விழுக்காடு, கொப்பரை, சோயா மொச்சை விலை 2 விழுக்காடு, பருத்தி, ஆமணக்கு விதை விலை தலா 1 விழுக்காடு அதிகரித்தது.

பர்னேஷ் ஆயில் விலை 6 விழுக்காடு, விமான பெட்ரோல் விலை 5 விழுக்காடு, நாப்தா விலை 4 விழுக்காடு, தார் விலை 3 விழுக்காடு அதிகரித்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்