ரதி பார் பங்குகளை வெளியிடுகிறது

Webdunia

செவ்வாய், 16 அக்டோபர் 2007 (12:08 IST)
உருக்கு கம்பிகளை தயாரிக்கும் ரதி பார் லிமிடெட் பங்குகளை வெளியிடுகிறது. இதன் மூலம் ரூ.25 கோடி திரட்டுகிறது. ரூ.10 முகமதிப்புள்ள 71.42,857 பங்குகளை ரூ.35 என்ற விலையில் வெளியிடுகிறது.

இந்த பங்கு வெளியீடு பற்றி ரதி பார் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் அனுராக் ரதி கூறியதாவது, இந்த பங்குகள் அக்டோபர் 18 ந் தேதி வெளியிடப்படும். இதற்கு அக்டோபர் 23ந் தேதி வரை விணணப்பிக்கலாம்.

இதன் மூலம் திரட்டப்படும் நிதி இப்போதுள்ள உருக்கு கம்பி தயாரிக்கும் தொழிற்சாலையை விரிவுபடுத்துவதற்காக இயந்திரங்கள் வாங்கவும் தொழிற்சாலையை நவீனப்படுத்தவும் கட்டிடங்கள் கட்டவும் நடைமுறை மூலதனத்திற்கு செலவிடப்படும்.

இந்த பங்கு வெளியீட்டு மூலம் திரட்டப்படும் நிதி, பங்கு வெளியீட்டிற்கு பின் மொத்த முதலீட்டில் 43.74 விழுக்காடாக இருக்கும் என்று கூறினார்.

ரதி பார் நிறுவனம் பல்வேறு அளவுகளில் உருக்கு கம்பிகளை தயாரித்து வருகிறது. இது ஐ.எஸ்.ஓ 9002 தரச்சானிறிதழ் பெற்ற நிறுவனமாகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்