வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில், டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 6 பைசா குறைந்தது. 1 டாலர் ரூ.39.36 பைசா என்று முடிந்தது. நேற்று 1 டாலர் மதிப்பு ரூ.39.30 பைசாவாக இருந்தது.
காலையில் 1 டாலர் ரூ.39.28 என்ற அளவில் வர்த்தகம் தொடங்கியது. 1 டாலரின் விலை ரூ39.28 முதல் ரூ.39.45 வரை பரிமாற்றம் நடந்தது. காலையில் டாலரின் மதிப்பு குறைந்து ரூபாயின் மதிப்பு அதிகரித்தது. மதியத்திற்கு பின் டாலரின் விலை உயர ஆரம்பித்தது.
இன்று ரிசர்வ் வங்கி 1 டாலர் ரூ.39.33 என்று மதிப்பு நிர்ணயித்தது. நேற்று ரிசர்வ் வங்கி 1 டாலர் ரூ.39.31 என நிர்ணயித்திருந்தது.