தங்கம், வெள்ளி விலை சரிவு!

Webdunia

வியாழன், 4 அக்டோபர் 2007 (20:16 IST)
மும்பை பங்குச் சந்தையில் தங்கம், வெள்ளி விலைகள் குறைந்தன.

பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.220-ம், தங்கம் விலை 10 கிராமுக்கு ரூ.120ம் குறைந்தது. நேற்றும் விலை குறைந்தது குறிப்பிடத்தக்கது.

அந்நிய நாட்டு சந்தைகளில் இருந்தும், உள்நாட்டில் மற்ற நகரங்களில் நகை தயாரிப்பாளர்கள் தங்கம் வாங்க ஆர்வம் காட்டவில்லை. அதே நேரத்தில் மொத்த வியாபாரிகள் அதிகளவு விற்பனைக்கு கொண்டு வந்த காரணத்தினால் இதன் விலை குறைந்தன என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

தொழில் துறையினர் வெள்ளியை வாங்குவதற்கு ஆர்வம் காட்டவில்லை. இதனால் காலையில் வெள்ளியின் விலை கிலோ ரூ.17,915 என்ற அளவில் தொடங்கியது. பிறகு மேலும் விலை குறைந்து மாலையில் கிலோ ரூ.17,870 என்ற அளவில் முடிவடைந்தது. இது நேற்றைய விலையை விட ரூ.220 குறைவு.

இதே போல் காலையில் தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.9,370 ஆகவும், ஆபரணத் தங்கம் (22 காரட்) ரூ.9,325 ஆகவும் தொடங்கியது. நகை உற்பத்தியாளர்கள் தங்கம் வாங்குவதில் ஆர்வம் காண்பிக்கவில்லை. இதனால் தங்கம் (24 காரட்) 10 கிராம் விலை ரூ.9,370 ஆகவும், 22 காரட் விலை ரூ.9,320 ஆகவும் குறைந்தது. இது நேற்றைய விலையை விட ரூ.120 குறைவு.

இறுதி விலை நிலவரம் :

தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.9,370 (9,490)
தங்கம் (22 காரட்) 10 கிராம் ரூ.9,320 (9,440)
வெள்ளி (பார்) 1 கிலோ ரூ.17,870 (18, 090)

வெப்துனியாவைப் படிக்கவும்