அந்நியச் செலாவணி சந்தையில் டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு இன்றும் சிறிது அதிகரித்தது.
வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலாவணி சந்தையில், மாலை இறுதியில் ஒரு டாலர் ரூ.39.73 / 39.74 என்ற அளவில் முடிவடைந்தது. நேற்றைய இறுதி விலை ஒரு டாலர் ரூ.39.76 / 39.77.
காலையில் ஒரு டாலர் ரூ.39.98 முதல் ரூ. 39.80 வரை விற்பனையானது. ஒரு கட்டத்தில் ரூ.39.72 / 39.73 என்ற அளவிற்கு குறைந்தது. நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 3 பைசா அதிகரித்தது.