ஜூலை 31க்குள் வருமான வரி படிவம்

Webdunia

புதன், 18 ஜூலை 2007 (14:27 IST)
இந்த மாதம் (ஜூலை) 31ம் தேதிக்குள் வருமான வரி படிவத்தை தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு மேல் கால அவகாசம் நீட்டிக்கப்படாது என்று மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம். திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

புதுடெல்லியில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார் நிதியமைச்சர் ப.சிதம்பரம்.

அவரிடம், வருமான வரி செலுத்தும் தனிநபர்களுக்கு, படிவம் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படுமா என்று கேட்டதற்கு "கால அவகாசத்தை நீட்டிக்க வாய்ப்பே இல்லை" என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார்.

கடைசி நாள் வரை காத்திருக்காதீர்கள். இன்றே வருமான வரி படிவத்தை தாக்கல் செய்துவிடுங்கள்'' என்றும் அவர் கூறினார்.

மேலும், அஞ்சலகங்கள் மூலம் வருமான வரி படிவத்தை தாக்கல் செய்ய இந்த ஆண்டு வசதி செய்யப்படவில்லை. கடந்த ஆண்டு நிலவிய அசாதாரண சூழல் காரணமாக அஞ்சலகங்கள் மூலம் தாக்கல் செய்ய அனுமதிக்கப்பட்டது. அதற்காக இந்த ஆண்டும் அனுமதிக்க வேண்டிய தேவையில்லை என்றும் சிதம்பரம் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்