பயிர் வகைகளை பாதுகாக்க தனி ஆணையம்!

உலக வர்த்தக அமைப்பின் வணிக தொடர்பான அறிவு சொத்துரிமை காப்பு விதிகளின் கீழ் நிறைவேற்றப்பட்ட பயிர் வகைகள் காப்பு சட்டத்தின் கீழ் நமது நாட்டின் பூர்வீகப் பயிர்கள் அனைத்தையும் காக்க தனி ஆணையத்தை உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது!

பயிர் வகைகளைக் காக்கவும், விவசாயிகளின் உரிமைகளை பாதுகாக்கவும் இரண்டு தனிச் சட்டங்கள் 2001 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இச்சட்டங்களின் கீழ் நமது நாட்டின் பயிர் வகைகளைக் காக்கவும், விவசாயிகளின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்கவும் தனி ஆணையத்தை அமைக்க பரிந்துரை செய்யப்பட்டது.

வேளாண் அமைச்சகத்தின் அந்த பரிந்துரையை ஏற்றுக்கொண்ட பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவைக் குழு, பயிர் வகைகளை பாதுகாக்க தலைமைப் பதிவாளர் எனும் பொறுப்பை உருவாக்கி ஆணையத்தை அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது.

இதன்மூலம் நமது நாட்டின் பயிர் வகைகளும், விதைகளும் காப்பற்றப்படுவது மட்டுமன்றி, நல்ல மகசூலைத் தரும் உயர் ரக விதைகளை விவசாயிகள் அனைவருக்கும் தடையின்றி வழங்க வழியேற்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்