நாகை, திருவாரூரில் 1 லட்சம் ஏக்கர் சம்பா பயிர்கள் பாதிப்பு!

கடந்த வாரம் பெய்த தொடர் மழையில் நாகை, திருவாரூர் மாவட்டங்களில் சுமார் 1 லட்சம் ஏக்கரில் சம்பா பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக நாகை மக்களவை உறுப்பினர் ஏ.கே.எஸ். விஜயன் தெரிவித்துள்ளார்!

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கும், பயிர்களுக்கும் உடனடியாக கணக்கெடுப்பு செய்து அனைவருக்கும் குறுகிய கால விதை வேளாண் இடு பொருள்கள், செலவுத் தொகை ஆகியவற்றை அளித்து குறுகிய கால பயிர்க்கடன் பெற வழி வகை செய்ய வேண்டும்.

விவசாயிகள் ஏக்கருக்கு ரூ.11 ஆயிரம் வரை செலவு செய்துள்ளனர். இந்தத் தொகையை நிவாரணமாக வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாகை மக்களவைத் தொகுதிகளுக்குட்பட்ட மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை விஜயன் நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோரையும் அவர் நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்