அமராவதி அணை திறப்பு : வெள்ள அபாயம்!

ஞாயிற்றுக்கிழமை முதல் தொடர்ந்து பெய்துவரும் கன மழையால் அமராவதி அணை நிரம்பியதை அடுத்து அதிலிருந்து நொடிக்கு 96,000 கன அடி நீர் திறந்துவிடப்பட்டு வருவதையடுத்து வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது!

அமராவதியிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் கரூர் மாவட்டத்தில் பாய்ந்து பிறகு காவிரியில் கலப்பதால் காவிரியிலும் வெள்ளப் பெருக்கு ஏற்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அமராவதி, காவிரி ஆற்றங்கரைகளில் ஒட்டி குடியிருப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயருமாறு கரூர், ஈரோடு, கோவை மாவட்ட ஆட்சியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதேபோல கடலூர் மாவட்டத்தில் மணிமுத்தாறில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் 15 கிராமங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மணிமுத்தாறு நதிக்கு நொடிக்கு 20,000 கன அடி வீதம் தண்ணீர் வந்துக்கொண்டிருக்கிறது.

இதுமட்டுமின்றி, கடந்த 24 மணி நேரத்தில் கடலூர் மாவட்டத்தில் 11 செ.மீ. மழை பெய்துள்ளது. வீராணம் ஏரியும் நிரம்பிவிட்ட நிலையில், இம்மாவட்டத்திற்கு வெள்ள அபாயம் தொடர்ந்து நீடிக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்