விதை உற்பத்திக்கு ரூ.199 கோடி ஒதுக்கீடு!

விவசாய மற்றும் மீன் உற்பத்தியைப் பெருக்கத் தேவையான விதை உற்பத்தி மையங்களை நிறுவ மத்திய அரசு ரூ.198.90 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது!

தலைநகர் டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் இன்று நடந்த பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் ப. சிதம்பரம், விவசாயிகள் அனைவருக்கும் தரமான விதைகள் கிடைக்க வழி செய்வதே இத்திட்டத்தின் நோக்கம் என்று கூறினார்.

நாடு முழுவதும் 85 இடங்களில் விதை உற்பத்தி மையங்கள் அமைக்கப்படும் என்றும், அதற்காக நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கீடு செய்யப்படவுள்ள ரூ.198.90 கோடியில் ரூ.111.37 கோடி விதை உற்பத்தி பணிக்காகவும், ரூ.66.22 கோடி உபகரணங்கள், இயந்திரங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உருவாக்கவும் செலவிடப்படும் என்று கூறினார்.

விதைகள் மட்டுமின்றி, விதைகளை விதைக்கும் உபகரணங்களையும் தரமாக உருவாக்கி இம்மையங்களின் வாயிலாக விவசாயிகளுக்கு அளிக்கப்படும் என்று கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்