கடந்த இரண்டரை மாதங்களில், கடந்த வாரத்தில் ரூபாய் மதிப்பு 1.2 சதவீதம் சரிந்தது.
கடந்த வெள்ளியன்று அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 62.48-ஆக இருந்தது. செப்டம்பர் 30-லிருந்து இதுதான் அதிகபட்ச சரிவு.
எண்ணெய் நிறுவனங்கள் 40 சதவீதம் டாலர்களை அந்நிய செலாவணி சந்தையில்தான் வாங்குகின்றன. இதற்கான சிறப்பு சலுகை நவம்பருடன் முடிகிறது. இதனால், ரூபாய்க்கு இருந்த ஆதரவு குறைவதால், மதிப்பு மேலும் பலவீனமடைந்துள்ளது.