தங்கம் விலை கிடுகிடு உயர்வு

புதன், 1 செப்டம்பர் 2010 (15:49 IST)
புது டெல்லி: தங்கம் விலை இன்று கிடுகிடுவென உயர்ந்து 10 கிராமுக்கு ரூ.19,405 என்ற விலையை எட்டியது.

உலகச் சந்தையில் ஏற்பட்ட விலை உயர்வை அடுத்து இந்தியாவிலும் அதன் தாக்கம் ஏற்பட்டதாக சந்தை நிபுணர்கள் தெரிவித்தனர்.

டாலர் மதிப்பு சரிவால் உலகச் சந்தையில் தங்கம் விலை இரண்டு மாத உயர்வை எட்டியது.

இதனால் இந்திய சந்தையில் 10 கிராம் தங்கம் ரூ.215 அதிகரித்தது. ஜூன் 8ஆம் தேதி 10 கிராம் தங்கம் ரூ.19,220 ஆக இருந்தது தற்போது அதனையும் கடந்து 19,405ஆக அதிகரித்தது.

வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.525 அதிகரித்து ரூ.30,950ஆக அதிகரித்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்