நிஃப்டி 77 -சென்செக்ஸ் 283 புள்ளி உயர்வு

திங்கள், 9 பிப்ரவரி 2009 (16:33 IST)
மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது அதிகரித்த குறியீட்டு எண்கள், கடைசி வரை எவ்வித பாதிப்பும் இல்லாமல் அதிகரித்தன.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 2.70 விழுக்காடு அதிகரித்து குறியீட்டு எண் 2900 ஐ தாண்டியது.

வர்த்தகம் முடிவடைந்த போது சென்செக்ஸ் 283.03 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 9,583.89 ஆக அதிகரித்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 76.80 புள்ளிகள் அதிகரித்து, குறியீட்டு எண் 2,919.90 ஆக உயர்ந்தது.

அதே போல் மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 49.15, சுமால் கேப் 53.47, பி.எஸ்.இ 500- 88.01 புள்ளிகள் அதிகரித்தது.

மும்பை பங்குச் சந்தையில் பூஷன் ஸ்டீல் பங்கு விலை 16.98 %, பைனான்ஸ் டெக் 15.30%, எஜிகம்ப் சொலியூஷன் 13.96%, யூனைடெட் ஸ்பிரிட் 13.92%, ஆல்சோம் புராஜக்ட் 12.83% அதிகரித்தது.

ஆனால் ஸ்பைஸ் டெலிசர்வீஸ் பங்கு விலை 14.64%, பஜாஜ் பைனான்ஸ் 4.79%, ஹெச்.இ.எல் டெக்னாலஜி 4.33%, எஸ்ஸர் ஷிப்பிங் 2.92%, இந்தியா புல்ஸ் 2.77% குறைந்தது.

மும்பபங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1562 பங்குகளின் விலை அதிகரித்தது. 910 பங்குகளின் விலை குறைந்தது. 83 பங்குகளின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்