வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் அதிக மாற்றம் இல்லை. டாலர் வாங்குவது மிக குறைந்த அளவே இருந்தது.
இன்று வர்த்தகம் தொடங்கும் போது 1 டாலரின் மதிப்பு ரூ.48.82 என்ற அளவில் இருந்தது. இது நேற்றைய இறுதி நிலவரத்தை விட 1 பைசா அதிகம்
நேற்று இறுதி விலை 1 டாலர் ரூ.48.81.
வர்த்தகம் நடக்கும் போது 1 டாலரின் விலை ரூ.48.77 முதல் ரூ.48.85 என்ற அளவில் இருந்தது.