நிஃப்டி 108-சென்செக்ஸ் 358 புள்ளி சரிவு

திங்கள், 2 பிப்ரவரி 2009 (16:46 IST)
மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே குறைந்த குறியீட்டு எண்கள், இறுதி வரை எவ்வித மாற்றமும் இல்லாமல் படிப்படியாக குறைந்தன.

வர்த்தகம் முடிவடைந்த போது சென்செக்ஸ் 357.54 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 9,066.70 ஆக குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 108.15 புள்ளிகள் குறைந்து, குறியீட்டு எண் 2,766.65 ஆக சரிந்தது.

அதே போல் மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 45.56, சுமால் கேப் 51.10, பி.எஸ்.இ 500- 107.73 புள்ளிகள் குறைந்தன.

மும்பபங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 867 பங்குகளின் விலை அதிகரித்தது. 1577 பங்குகளின் விலை குறைந்தது. 83 பங்குகளின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்