மும்பை தங்கம் வெள்ளி சந்தையில், இன்றும் தங்கம், வெள்ளியின் விலை சரிந்தது. கடந்த வாரம் தொடர்ச்சியாக அதிகரித்து வந்த தங்கம், வெள்ளியின் விலை இன்று குறைந்தது.
பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.105 குறைந்தது.
ஆபரணத் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.130 குறைந்தது.
இதே போல் லண்டன் சநதையிலும் தங்கம், பார் வெள்ளியின் விலை குறைந்தது. இங்கு 1 அவுன்ஸ் 24 காரட் தங்கத்தின் விலை 910.00/911.00 டாலராக குறைந்தது. (வெள்ளிக் கிழமை இறுதி விலை 910.00/911.00 $). 1 அவுன்ஸ் பார் வெள்ளி விலை 12.44/12.45 டாலராக குறைந்தது. (வெள்ளிக் கிழமை இறுதி விலை 12.48/12.49 $).
இன்று காலை விலை விபரம்.
24 காரட் தங்கம் 10 கிராம் ரூ. 14,150 22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.14,085 பார் வெள்ளி கிலோ ரூ.19,760.