தங்கம் விலை உயர காரணம் ?

சனி, 31 ஜனவரி 2009 (16:57 IST)
மும்பை தங்கம் வெள்ளி சந்தையில், இது வரை இல்லாத அளவிற்கு தங்கத்தின் விலை அதிகரித்தது.

கடந்த இரண்டு நாட்களில் மட்டும் ஆபரணத் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.475 அதிகரித்துள்ளது. இதே போல் பார் வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.645 உயர்ந்துள்ளது.

மும்பை தங்கம் வெள்ளி சந்தையின் இறுதி நிலவரப்படி இன்று தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ. 40 அதிகரித்தது. பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.70 அதிகரித்தது.

இன்றும் நகை தயாரிப்பாளர்கள் அதிக அளவு தங்கத்தை வாங்கினார்கள். இதனால் காலையில் சந்தை தொடங்கும் போது அதிகரித்த விலை இறுதி வரை குறிப்பிடும் அளவு குறையவில்லை.

பங்குச் சந்தை, பண்டக சந்தைகளில் அடிக்கடி மாற்றம் இருப்பதால், பலர் தங்கத்தில் பாதுகாப்பாக முதலீடு செய்கின்றனர். இதுவே தங்கம் வெள்ளி விலை அதிகரிப்பதற்கு காரணம் என்று வர்த்தகர்கள் கூறுகின்றனர்.

இன்று மாலை விலை விபரம்.

24 காரட் தங்கம் 10 கிராம் ரூ. 14,280 (நேற்று ரூ.14,240)
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.14,215 (ரூ.14,175)
பார் வெள்ளி கிலோ ரூ.19,865 (ரூ.19,795).

வெப்துனியாவைப் படிக்கவும்