நிஃப்டி 78-சென்செக்ஸ் 253 புள்ளி உயர்வு

புதன், 28 ஜனவரி 2009 (17:10 IST)
மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது அதிகரித்த குறியீட்டு எண்கள், இறுதி வரை குறையவில்லை.

வர்த்தகம் முடிவடைந்த போது சென்செக்ஸ் 253.39 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 9,257.47 ஆக உயர்ந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 78.15 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 2,849.50 ஆக உயர்ந்தது.

அதே போல் மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 46.93, சுமால் கேப் 38.44, பி.எஸ்.இ 500- 87.90 புள்ளிகள் அதிகரித்தன.

இன்று தேசிய பங்குச் சந்தையில் நடந்த வர்த்தகத்தில் எவினிக்ஸ் அசசரீஸ் பங்கு விலை 21.62%, மிக் எலக்ரானிக்ஸ் 20.04%, ஹாங்யங் டாய்ஸ் அண்ட் டெக்ஸ்டைல்ஸ் 19.55%, டிரிகம் இந்தியா 18.75%, மேக்னம் வெஜ்சர் 17,89%, சத்யம் கம்ப்யூட்டர் 17.67%, ருசி சோயா 16.84%, மேகஸ் இந்தியா 16.10%, என்.எம்.டி.சி 15.56%, யூனைடெட் ஸ்பிரிட் 15.50%, யூனிடெக் 13.63%, செயில் 9.63%, ரிலையன்ஸ் பெட்ரோலியம் 7.73%, ரான்பாக்ஸ் 7.12%, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி 7.07%, டி.சி.எஸ் 6.79%, கெய்ரன் 6.76%, கெயில் 6.68%, டி.எல்.எப் 6.58% அதிகரித்தது.

கிலின்மார்க் பார்மசூடிகல்ஸ் பங்கு விலை 24.83%, இந்தே கவுன்ட் இன்டஸ்டிரிஸ் 11.63%, ஹைடெக் கியர் 10.55%, செம்பாப் ஆல்காலிக் 10.38%, ராம் கிருஷ்ணா போர்ஜிங் 9.97%, சுப்ரஜித் இன்ஜினியரிங் 9.74%, கன்சாலிடெட் பின்வெஸ்ட் அண்ட் ஹோல்டிங்ஸ் 9.59 %, படேல் இன்டிகிரேட் லாஜிஸ்டிக் 9.52%, பிர்மல் கிளாஸ் 9.21% ஜென்சிஸ் இன்டர்நேஷனல் 9.09% குறைந்தது.

அதே போல் மாருதி பங்கு விலை 3.18%, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் 3.04%, சுல்ஜான் 2.34%, பாரத் பெட்ரோலியம் 1.59%,ஸ்டெர்லைட் 0.47% குறைந்தன.

மும்பபங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1403 பங்குகளின் விலை அதிகரித்தது. 1025 பங்குகளின் விலை குறைந்தது. 102 பங்குகளின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

மும்பை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் உலோக உற்பத்தி பிரிவு குறியீட்டு எண் 4.44%, மின் உற்பத்தி பிரிவு 1.48%, ரியல் எஸ்டேட் பிரிவு 6.32%, நுகர்வோர் பொருட்கள் உற்பத்தி பிரிவு 3.04%, பொதுத் துறை நிறுவனங்கள் பிரிவு 3.12%, வாகன உற்பத்தி பிரிவு 1.21%, வங்கி பிரிவு 3.79%, தொழில் நுட்ப பிரிவு 1.80%, தகவல் தொழில் நுட்ப பிரிவு 2.46%, பெட்ரோலிய நிறுவனங்கள் பிரிவு 3.76% அதிகரித்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்