மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது குறைந்த குறியீட்டு எண்கள், படிப்படியாக குறைய துவங்கின. இறுதி வரை உயரவேயில்லை.
வர்த்தகம் முடிவடைந்த போது சென்செக்ஸ் 139.49 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 8,674.35 ஆக குறைந்தது.
தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 35.25 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 2,678.55 ஆக சரிந்தது.
அதே போல் மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 45.26, சுமால் கேப் 49.41, பி.எஸ்.இ 500- 57.35 புள்ளிகள் குறைந்தன.
இன்று தேசிய பங்குச் சந்தையில் நடந்த வர்த்தகத்தில் சத்யம் கம்ப்யூட்டர் பங்கு விலை 31.25%, முக்தா ஆர்ட்ஸ் 9.54%, ஜோதி லேப் 10.48%, சிப்லா 7.64%, ரிலையன்ஸ் 1.75%, டாடா மோட்டார்ஸ் 1.62%, ஐடியா 1.54%, பவர் கிரிட் 1.41%, ஏ.பி.பி 1.15%, ரான்பாக்ஸி 0.91%, என்.டி.பி.சி 0.73%, ரிலையன்ஸ் இன்ப்ரா 0.19%, டாடா கம்யூனிகேஷன்ஸ் 0.18% அதிகரித்தன.
அதே நேரத்தில் கனரா வங்கி பங்கு விலை 14.64%, மகேந்திரா அண்ட் மகேந்திரா 7.96%, டாடா ஸ்டீல் 7.22%, நேஷனல் அலுமினியம் 6.54%, அம்புஜா சிமென்ட் 5.64%, யூனிடெக் 4.94%, பஞ்சாப் நேஷனல் பாங்க் 4.83%, கிரேசம் 4.47% ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா 4.48%, பாரத் பெட்ரோலியம் 4.80%, ஜு என்டர்டெயர்மென்ட் 6.39% குறைந்தன.
மும்பை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 795 பங்குகளின் விலை அதிகரித்தது. 1609 பங்குகளின் விலை குறைந்தது. 99 பங்குகளின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
மும்பை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் உலோக உற்பத்தி பிரிவு குறியீட்டு எண் 3.35%, மின் உற்பத்தி பிரிவு 1.32%, ரியல் எஸ்டேட் பிரிவு 2.45%, நுகர்வோர் பொருட்கள் உற்பத்தி பிரிவு 2.87%, பொதுத் துறை நிறுவனங்கள் பிரிவு 1.96%, வாகன உற்பத்தி பிரிவு 1.42%, வங்கி பிரிவு 4.16%, தொழில் நுட்ப பிரிவு 1.76%, தகவல் தொழில் நுட்ப பிரிவு 2.04% குறைந்தது.
அதே நேரத்தில் பெட்ரோலிய நிறுவனங்கள் பிரிவு 0.26% அதிகரித்தது.