ரூபாய் மதிப்பு 10 பைசா சரிவு

வெள்ளி, 23 ஜனவரி 2009 (13:16 IST)
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 10 பைசா குறைந்தது.

ஆசிய நாட்டு சந்தைகளில் பாதகமான நிலை நிலவுவதால், இந்திய பங்குச் சந்தையில் இன்றும் குறியீட்டு எண்கள் குறைந்தன. இதனால் அந்நிய முதலீடு வெளியேறும் என்பதாலும், அத்துடன் மற்ற நாட்டு அந்நியச் செலவாணிக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்ததால், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் குறைந்தது.

இன்று வர்த்தகம் தொடங்கும் போது 1 டாலரின் மதிப்பு ரூ.49.24 என்ற அளவில் இருந்தது. இது நேற்றைய இறுதி நிலவரத்தை விட 10 பைசா குறைவு.

நேற்றைய இறுதி விலை 1 டாலர் ரூ.49.14-49.16.

நேற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 3 முதல் 4 பைசா வரை குறைந்தது.

அந்நியச் செலவாணி சந்தையில் வர்த்தகம் நடக்கும் போது, 1 டாலர் விலை ரூ.49.13 முதல் ரூ.49.30 என்ற அளவில் இருந்தது.


ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள அந்நியச் செலவாணி மதிப்பு விபரம்:
1 டாலர் மதிப்பு ரூ.49.19 பைசா
1 யூரோ மதிப்பு ரூ.63.60
100 யென் மதிப்பு ரூ.55.58
1 பவுன்ட் ஸ்டெர்லிங் ரூ.67.60.

வெப்துனியாவைப் படிக்கவும்